‘சைத்தான்’, ‘சத்யா’ படங்களை இயக்கியவர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. ‘சைத்தான்’ திரைப்படம் எதிர்பார்த்த அளவு சரியாகப் போகவில்லை. ஆனால் சிபிராஜுடன் இணைந்த ‘சத்யா’ திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து பிரதீப் - சிபிராஜ் கூட்டணியில் புதிய படம் உருவாகி வருகிறது. இது கன்னட திரைப்படமான ‘கவலுடாரி’ படத்தின் ரீமேக் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இதில் சிபிராஜுக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடிக்கவுள்ளார்.
மேலும் இதில் நாசர், சம்பத் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகிவரும் இத்திரைப்படத்தை தனஞ்செயன் தயாரிக்கிறார். இசை: சைமன் கே கிங், வசனம்: ஜான் மகேந்திரன்
நந்திதா தெலுங்கில் ‘அக்ஷரா’ , தமிழில் வைபவுடன் நடித்த ‘டானா’ ஆகிய படங்களின் வெளியீட்டை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறார்.