ETV Bharat / sitara

ஆபாச வீடியோ வெளியிடுவதாக மிரட்டிய மர்ம நபர் - தக்க பதிலடி கொடுத்த நமிதா! - namitha movies

தன்னிடம் ஆபாசமாகப் பேசியவரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நமீதா வெளியிட்டுள்ளார்.

ஆபாச வீடியோ வெளியிடுவதாக மிரட்டிய மர்ம நபர்- தக்க பதிலடி கொடுத்த நமிதா!

author img

By

Published : Mar 19, 2020, 3:18 PM IST

'எங்கள் அண்ணா', 'ஏய்' போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ‘நமிதா’. இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார். தனது நண்பரான வீரேந்திர சவுத்ரியை 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு திரைத்துறைவிட்டு விலகியுள்ள இவர், சமீபத்தில் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இந்நிலையில், தன்னை ஒரு நபர் தவறான முறையில் அழைக்கிறார் என்று அவருடைய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நமிதா வெளியிட்டுள்ளார். அதில், "இவன் என்னை தவறான வார்த்தைகளில் அழைக்கிறான். அதற்கு நான் கோபமாக மெசேஜ் அனுப்பினேன். அதற்கு அவன், என்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்றும், என்னுடைய ஆபாச வீடியோ ஒன்றை பார்த்ததாகவும், அதை ஆன்லைனில் வெளியிடப்போவதாகவும் மிரட்டினான். உண்மை என்ன என்பது எனக்குத் தெரியும், அதனால் உன்னால் முடிந்தால் செய்துகொள் என்று கூறிவிட்டேன்.

ஆபாச வீடியோ வெளியிடுவதாக மிரட்டிய மர்ம நபர்- தக்க பதிலடி கொடுத்த நமிதா!
நடிகை நமிதாவின் இன்ஸ்டாகிராம் பதிவு

அவன் முகத்தைப் பாருங்கள். கேவலமான எண்ணம் கொண்டவன். அவனால் முடியும் என்கிற ஒரே காரணத்தால் மற்ற பெண்களை என்ன வேண்டுமானாலும் அழைக்கலாம் என நினைக்கிறான். ஒரு உண்மையான ஆணுக்கு, பெண்களை எப்படி மதிக்கவேண்டும் என்பது தெரியும். பெண்கள் தினம், நவராத்ரி எனக் கொண்டாடுவதை விட்டுவிட்டு, முதலில் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'அந்தாதுன்' பிரசாந்துக்கு ஜோடியாகும் 'மிஸ் தமிழ்நாடு'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.