ETV Bharat / sitara

‘ஹிப் ஹாப் தமிழா’வின் வெற்றிக்கு நான் மட்டும் காரணம் கிடையாது - மனம் திறந்த ஆதி - நான் சிரித்தால் ஆதி

நான் பள்ளியில் படிக்கும் போது 'ராப்' பாடல்தான் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால், இப்போது எனது ‘ஹிப் ஹாப்’ பாடலையும் ரசிக்கிறார்கள்.

aadhi
aadhi
author img

By

Published : Feb 19, 2020, 7:30 PM IST

‘ஹிப் ஹாப் தமிழா’வின் வெற்றிக்கு எனது நண்பன் ஜீவாதான் முதுகெலும்பு என நடிகரும் இசையமைப்பாளருமான ஆதி கூறியுள்ளார்.

இயக்குநர் சுந்தர் சி தனது அவ்னி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, ஹிப்ஹாப் ஆதி நடித்து கடந்த வாரம் வெளியான படம் நான் சிரித்தால். துன்பம் வரும் நேரத்திலும் சிரிக்கும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஆதி நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்து திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதையடுத்து இந்தப் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகரும் இசையமைப்பாளருமான ஆதி பேசுகையில், ”இந்த வெற்றி அன்பால் மட்டுமே கிடைத்திருக்கிறது. அன்று முதல் இன்றுவரை எனது ரசிகர்கள் எனக்கு ஆதரவளித்து வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் எனக்கு சரி எது? தவறு எது? என்று சுட்டிக்காட்டி ஊக்குவிக்கும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி.

aadhi
நடிகர் - இசையமைப்பாளர் ஆதி

நான் பள்ளியில் படிக்கும்போது 'ராப்' பாடல்தான் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால், இப்போது எனது ‘ஹிப் ஹாப்’ பாடலையும் ரசிக்கிறார்கள். என்னைப் போலவே சுதந்திரமான கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு படத்திலும் அறிமுகப்படுத்தி வாய்ப்பு வழங்கி வருகிறோம்.

அப்படிதான் யூடியூப் பிரபலம் ராணாவை அழைத்து வந்தோம். அவர் மட்டுமல்லாமல் அவருடைய நண்பர்களையும் அழைத்து வந்தோம். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இயக்குநராகும் திறமையுள்ளது.

அதேபோல, ‘எரும சாணி’ விஜய்யையும் சென்னையில் வாய்ப்பு நிறைய இருக்கிறது வா என்று அழைத்தேன். இன்று ஒரு படத்தில் இயக்குநராக ஒப்பந்தமாகியிருக்கிறார். இது எதிர்காலத்திலும் தொடரும்.‘ஹிப் ஹாப் தமிழா’ என்பது நான் மட்டுமல்ல. நானும் எனது நண்பன் ஜீவா இருவரும். ஆனால், அவரைப் பற்றி பேசுவதை அவர் விரும்பமாட்டார். ‘ஹிப் ஹாப் தமிழா’வின் வெற்றிக்கு ஜீவாதான் முதுகெலும்பு. எனக்கு பல கனவுகள் இருக்கின்றன. அதை ஒவ்வொன்றாக நனவாக்கி வருகிறேன்” என்றார்.

இதையும் வாசிங்க: நாய் கூறும் கதை - 'அன்புள்ள கில்லி' மோஷன் போஸ்டர் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.