'துப்பறிவாளன்' படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கியுள்ள படம் 'சைக்கோ'. உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், சிங்கம்புலி, ராம், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் பிரதான கேரக்டரில் நடித்துள்ள உதயநிதி ஸ்டாலின் பார்வை குறைபாடுள்ளவராக தோன்றுகிறார். இயக்குநர் ராம் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ட்ரெய்லரில் உலகப் புகழ்பெற்ற மறைந்த இசையமைப்பாளர் பீதோவனின் இசைக் கோர்ப்பு 'ஃபர் எலீஸ்' இசை பின்னணியில் ஒலிக்க வசனம் இல்லாமல் காட்சிகள் இடம்பிடித்திருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. நேற்று இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி இன்னும் எதிர்பார்பை எகிறவைத்துள்ளது.
பல வன்முறை காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்றிருப்பதால் இதற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. ஏ சான்றிதழ் வழங்கினாலும் இப்படத்தில் எந்த காட்சியையும் நீக்காமல் நான்கு வசனங்களுக்கு மட்டும் ஒலி இழப்பு செய்துள்ளனர்.