சென்னை: 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தின் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கேக் வெட்டி சக்ஸஸ் பார்டி கொண்டாடியுள்ளனர்.
பேமிலி டிராமா ஜானரில் அமைந்திருந்த 'நம்ம வீட்டு பிள்ளை' கடந்த மாதம் வெளியானது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாகவும், அனு இமானுவேல் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். ஹீரோயினாக கலக்கிவரும் ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயனின் தங்கையாக தோன்றி சர்ப்ரைஸ் கொடுத்தார்.
இவர்கள் தவிர இயக்குநர் இமயம் பாரதிராஜா, சூரி, நட்ராஜ், சமுத்திரகனி, வேல ராமமூர்த்தி, ஆர்.கே. சுரேஷ், அர்ச்சனா, ஆடுகளம் நரேன், யோகிபாபு என பெரும் நட்சத்திர பட்டாளமே இறங்கி தங்களது கேரக்டர்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினர்.
படத்தின் ரிலீசுக்கு முன்பே டி. இமான் இசையமைப்பில் எங்க அண்ணன் பாடலை வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிறவைத்தனர். இதையடுத்து படமும் அதை சரியாக பூர்த்தி செய்ததுடன், படம் வெளியான அனைத்து இடங்களிலும் கணிசமான வசூலை குவித்துள்ளது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தைப் பார்க்க திரையரங்குகள் பக்கம் குவிந்தனர்.
படம் பெற்றுள்ள மாபெரும் வெற்றியை ஒட்டுமொத்த படக்குழுவினர்களும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை இசையமைப்பாளர் டி. இமான் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
-
#NammaVeettuPillai Success Meet organised by @sunpictures for the complete cast n crew! Thanks one n all for making the film a grand success!
— D.IMMAN (@immancomposer) October 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Praise God! pic.twitter.com/XgqZRm9ofL
">#NammaVeettuPillai Success Meet organised by @sunpictures for the complete cast n crew! Thanks one n all for making the film a grand success!
— D.IMMAN (@immancomposer) October 17, 2019
Praise God! pic.twitter.com/XgqZRm9ofL#NammaVeettuPillai Success Meet organised by @sunpictures for the complete cast n crew! Thanks one n all for making the film a grand success!
— D.IMMAN (@immancomposer) October 17, 2019
Praise God! pic.twitter.com/XgqZRm9ofL
சிவகார்த்திகேயன் தற்போது பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் 'ஹீரோ' என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படம் வரும் டிசம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.