விஜய் தொலைக்காட்சி 'ராஜாராணி' புகழ் கார்த்திக் சசிதரன், சன் தொலைக்காட்சி 'பாண்டவர் இல்லம்' புகழ் ஆர்த்தி சுபாஷ், 'கல்லூரி' படத்தில் நடித்த மதன் கோபால், 'உறியடி2' சசிகுமார், பிர்லா போஸ், அனிஷா சக்தி முருகன், வினோத் லோகிதாஸ், சிவகுமார் ராஜு ஆகியோர் நடித்துள்ளார்கள்.
ஒரு வருடத்திற்கு முன்பே உருவான இந்தப் படம் அண்மையில் பிக் ஐந்தாவது தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்தக் குறும்படத்திற்கு பெங்களூருவில் AISC விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த இயக்குநருக்காகவும் சிறந்த வசனகர்த்தாவுக்காகவும் என இரண்டு விருதுகள் இப்படம் பெற்றுள்ளது.
இந்தப் படத்தின் இயக்குநர் தாமோதரன் செல்வகுமார் கூறுகையில், "ஒரு வைரஸ் கிருமியை உருவாக்கி மக்களிடம் செலுத்தி மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கி மருத்துவ வியாபாரத்தைப் பெருக்குவது எப்படி என்று சொல்கிற குறும்படம்தான் 'மூடர்'.
இந்தப் படத்திற்குத் தற்போது நல்ல வரவேற்பும் விருதும் கிடைத்துள்ளது மகிழ்ச்சியையும் ஒரு உத்வேகத்தையும் அளிக்கிறது.
நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை. சினிமா மீது உள்ள காதலால் ஏழு ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு 'மூடர்' குறும்படத்தை எடுத்து இருக்கிறேன்.
என்னை நம்பி முதலீடு செய்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இதற்கு முன்பும் சில குறும்படங்கள் எடுத்திருந்தாலும் இதில் ஒரு திரைப்படத்திற்கான முன் முயற்சியாக முழு உழைப்பைப் போட்டிருக்கிறோம்.
அடுத்து ஒரு திரைப்பட முயற்சியில் இறங்கி இருக்கிறோம். ஓடிடியில் வெளியிடும் வகையில் அப்படம் உருவாக இருக்கிறது" என்றார்.