தமிழில் 'ராஜ தந்திரம்' படம் மூலம் நடிகராகவும், சசிகுமாரின் 'கிடாரி' படம் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகி அதன்பின் 'நிமிர்', 'எனை நோக்கி பாயும் தோட்டா' படங்களின் மூலம் முன்னணி இசையமைப்பாளராக மாறி பன்முகக் கலைஞராக விளங்குபவர் தர்புகா சிவா.
ஏற்கனவே இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்துள்ள தர்புகா சிவா, 'முதல் நீ முடிவும் நீ' என்ற படத்தை இயக்குவதன் மூலம் தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.
இந்தப்படத்தை சூப்பர் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் சமீர் பாரத் ராம் தயாரிக்கிறார். ‘துருவங்கள் பதினாறு’ புகழ் சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில், உலக புகைப்பட தினமான இன்று (ஆக. 19) இந்நாளை சிறப்பிக்கும் விதமாக படக்குழுவினர் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
முழுக்க முழுக்க பள்ளி மாணவர்களுக்கிடையே நடக்கும் கதையை மையமாகக் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் தர்புகா சிவா, இப்படத்திற்கு இயக்குநராக மட்டுமன்றி இசையமைப்பாளராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
'முதல் நீ முடிவும் நீ' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு! - தர்புகா சிவா இயக்கும் திரைப்படம்
சென்னை : இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கும் 'முதல் நீ முடிவும் நீ' படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.