ETV Bharat / sitara

மணி ஹீஸ்ட் வெப் சீரிஸ் பார்க்க ஊழியர்களுக்கு லீவு கொடுத்த 'படா' கம்பெனி

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் 'வெர்வ் லாஜிக்' என்ற நிறுவனம் வரும் செப்டம்பர் 3ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும், 'மணி ஹீஸ்ட்' வெப் சீரிஸைப் பார்க்க தங்களது ஊழியர்களுக்கு மொத்தமாக விடுமுறை அறிவித்துள்ளது

author img

By

Published : Sep 1, 2021, 7:16 PM IST

MONEY HEIST 5
MONEY HEIST 5

ஜெய்ப்பூர்: ஸ்பானிஷ் மொழியில் தயாராகி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி அதிரி புதிரி ஹிட் அடித்த வெப் சிரீஸ், மணி ஹீஸ்ட்.

அலெக்ஸ் ரோட்ரிகோ இயக்கிய இத்தொடர் 'ஆண்டெனா 3' என்ற ஸ்பானிய தொலைக்காட்சி சேனலில் 'லா காஸா டி பாபெல்' என்ற பெயரில் 2017ஆம் ஆண்டு முதன்முதலில் ஒளிபரப்பானது.

மொத்தம் 15 எபிசோடுகளைக் கொண்ட இத்தொடரின் உரிமையை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ் 22 எபிசோடுகளாகப் பிரித்து உலகமெங்கும் வெளியிட்டது.

2017ஆம் ஆண்டு முதல் இன்றைய தேதி வரை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைத் தன் வசம் இழுத்துக்கொண்டுள்ளது, மணி ஹீஸ்ட்.

மணி ஹீஸ்ட் சீரிஸின் கதைக்கரு என்ன?

ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கும் எட்டு கொள்ளையர்களையும், அவர்களை வழிநடத்தும் ப்ரொஃபஸர் என்ற ஒருவரையும் சுற்றி நடக்கும் கதை தான் மணி ஹீஸ்ட். அதுமட்டுமின்றி, அத்தொடரில் இடம்பெற்ற ப்ரொஃபஸர் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது.

'டோக்யோ' என்ற பெண்ணின் பார்வையில் இருந்து இந்தக் கதை சொல்லப்படுகிறது. இத்தொடர் தற்போது நான்கு சீசன்களாக வெளிவந்து வெற்றியடைந்துள்ளது.

மணி ஹீஸ்ட்டில் உள்ள கதாபாத்திரங்களின் நடுவே நடக்கும் காதல், கொள்ளையில் மாட்டிக்கொள்ளும் சகக் கொள்ளையர்களைக் காப்பாற்றுதல் என விறுவிறுப்பான களத்துடன் நான்கு சீசன் வரை கதை நகர்ந்துள்ளது.

இதனையடுத்து மணி ஹீஸ்ட் தொடரின் ஐந்தாவது சீசனின் முதல் பகுதி வரும் செப்டம்பர் 3ஆம் தேதியும் இரண்டாம் பகுதி டிசம்பர் 3ஆம் தேதியும் வெளியாகிறது.

மணி ஹீஸ்ட் வெப் தொடர் பார்க்க லீவு கொடுத்த நல்ல கம்பெனி

இந்த வெப் சீரிஸின் 5ஆவது பாகத்தின் முதல் 5 எபிசோடுகள் வரும் செப்டம்பர் 3ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் தமிழ் மொழியில் வெளியாகிறது. இதற்குப் பலர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் 'வெர்வ் லாஜிக்' என்ற நிறுவனம் வரும் செப்டம்பர் 3ஆம் தேதி, இந்த வெப் சீரிஸை தங்களது ஊழியர்கள் பார்ப்பதற்கு ஏதுவாக விடுமுறை அறிவித்துள்ளது.

அந்த விடுமுறைக்கு, 'நெட்ஃப்ளிக்ஸ் அண்ட் சில் ஹாலிடே' என்று பெயரிட்டு அன்று ஊழியர்கள் மொத்தமாக லீவு எடுப்பது, சொல்லாமல் லீவு எடுப்பது ஆகியவற்றைத் தவிர்க்க, நிறுவனத்திற்கு மொத்தமாகவே விடுமுறையை அறிவித்து அந்நிறுவனத்தின் சிஇஓ அபிஷேக் ஜெயின் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆர்டர் எடுக்கும் 'மணி ஹீஸ்ட் வாத்தி'!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.