ETV Bharat / sitara

சுகாதாரத் துறை பணியாளர்களை கௌரவித்த மோகன்லால் - கே.கே ஷைலஜா

கரோனா தொற்றில் சிறப்பாக பணியாற்றிவரும் கேரள சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதார வல்லுநர்களின் இடைவிடாத முயற்சிக்கு 'கம்ப்ளீட் ஆக்டர்' மோகன்லால் பாடல் பாடி நன்றி தெரிவித்துள்ளார்.

Mohanlal
Mohanlal
author img

By

Published : Apr 9, 2020, 12:39 PM IST

Updated : Apr 9, 2020, 1:08 PM IST

கரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கபட்ட தேசிய ஊரடங்கால் மலையாள நடிகர் மோகன்லால் சென்னையில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ளார். அங்கிருந்து அவர் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே ஷைலஜா, கேரளா முழுவதும் இருக்கும் 250 சுகாதாரப் பணியாளர்கள், நிபுணர்களுடன் உரையாடி அவர்களின் சமூக சேவைக்கு பாராட்டு தெரிவித்தார்.

ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த உரையாடலில் மோகன்லால் கரோனா தொற்று தடுப்புக்கு அயராது பணியாற்றும் பணியாளர்களுக்கு பாட்டு பாடியுள்ளார். 1972 ஆம் ஆண்டு ஏ.பி. பாஸ்கரன் இயக்கத்தில் வெளியான 'சினேஹதீபமே மிழி துரக்கு' என்ற படத்தில் இடம் பெற்ற பாடலான 'லோகம் முழுவன் சுகம் பகிரானாய் சினேஹதீபமே மிழி துரக்கு' என்ற பாடலை மோகன்லால் பாடினார்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

தங்களது கஷ்டங்களை மறந்து சமூகத்திற்காக உயர்ந்த சேவையாற்றி வரும் ஒவ்வொரு பணியாளருக்கும் நன்றி தெரிவித்த அவர், வரும் நாட்கள் மாநிலத்துக்கும் மிக முக்கியமானதாக இருக்கும் என்றார்.

இந்த உரையாடலின்போது, கண்ணூர் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் என்.ராய், தானும் மோகன்லாலும் அரசினர் மாதிரி உயர்நிலைப்பள்ளி திருவனந்தபுரத்தில் ஒரே வகுப்பில் படித்ததை நினைவுகூர்ந்தார். இதைக்கேட்ட மோகன்லால் மகிழ்ச்சியடைந்தார்.

பணிச்சுமை அதிகமாகயிருக்கும் சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர்களுடன் உரையாடியதற்காக அமைச்சர் ஷைலஜா மோகன்லாலுக்கு நன்றி தெரிவித்தார். கேரள முதலமைச்சரின் கோவிட் நிவாரண நிதிக்கு மோகன்லால் ரூ.50 லட்சம் நிதி அளித்திருந்தார்.

இதையும் வாசிங்க: போர்த்துக்கீசியர்களுக்கு எதிராக குஞ்சாலியின் விஸ்வரூபம் - மோகன்லாலின் மரைக்காயர் ட்ரெய்லர்

Last Updated : Apr 9, 2020, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.