இசை அமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவுடன் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து கோடம்பாக்கத்தில் புதிதாக ஸ்டுடியோ ஒன்றைத் தொடங்கி தனது இசைப் பணிகளை மேற்கொண்டுவருகிறார்.
![minister of state kishan reddy meets musician ilaiyaraja](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-05-kishan-reddy-ilayaraja-script-7205221_30032021152001_3003f_1617097801_126.jpg)
இதனையடுத்து இளையராஜாவின் ஸ்டுடியோவிற்கு அவ்வப்போது பிரபலங்கள் பலர் வருகைதருகின்றனர். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டுடியோவிற்கு வந்து இளையராஜாவைச் சந்தித்து ஸ்டுடியோவையும் பார்வையிட்டார். மேலும் நடிகர் விவேக்கும் இளையராஜாவைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
![minister of state kishan reddy meets musician ilaiyaraja](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11212655_613_11212655_1617098734019.png)
இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி இளையராஜாவைச் சந்தித்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களை கிஷன் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பத்ம விபூஷண் இசைஞானி இளையராஜாவை சந்தித்த மகிழ்வான தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.