ETV Bharat / sitara

20ஆவது திருமண நாள்: காதல் அனுபவத்தை பகிர்ந்த டக்லஸ் - Catherine Zeta-Jones with Michael Douglas

நானும் காத்ரினும் சில காலத்தை மகிழ்ச்சியாக கழித்தோம். ஒருநாள் உன் குழந்தைக்கு நான் தந்தையாகப் போகிறேன் என அவளிடம் சொன்னேன். அடுத்த நாள் அவள் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டாள்.

Michael Douglas
Michael Douglas
author img

By

Published : Nov 20, 2020, 8:31 PM IST

வாஷிங்டன்: மைக்கேல் டக்லஸ் - கேத்ரின் செட்டா ஜோன்ஸ் தம்பதி சமீபத்தில் தங்கள் 20ஆவது திருமண நாளை கொண்டாடினர். டக்லஸ் தன் காதல் அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து பாக்ஸ் நியூஸுக்கு பேட்டியளித்த டக்லஸ், ‘தி மாஸ்க் ஆப் சோரோ’ திரையிடல் நடந்துகொண்டிருந்தது. நான் அந்தப் படத்தை பார்த்துவிட்டு யார் இந்தப் பெண் (கேத்ரின்) என வியந்தேன். அடுத்த நாள் மீண்டும் அந்தப் படத்தின் திரையிடல் இருந்தது. நான் என் உதவியாளரை அழைத்து, நாளைய திரையிடலுக்கு கேத்ரின் தனியாக வருகிறாரா, அப்படி வந்தால் என்னுடன் உணவருந்த வருவாரா என கேட்டு சொல்லுங்கள் என்றேன். நான் நினைத்தது போல் எல்லாம் நடந்தது.

நானும் காத்ரினும் சில காலத்தை மகிழ்ச்சியாக கழித்தோம். ஒருநாள் உன் குழந்தைக்கு நான் தந்தையாகப் போகிறேன் என அவளிடம் சொன்னேன். அடுத்த நாள் அவள் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டாள். சொதப்பிவிட்டோம் என்று நினைத்தேன். பின்னர் அவளை சந்தித்தேன், நான் உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அவை அனைத்தும் உண்மைதான் போல என சொன்னாள். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டோம் என்றார்.

2000-இல் திருமணம் செய்துகொண்ட இத்தம்பதிக்கு டைலான், கேரி என இரு குழந்தைகள். காத்ரின் தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘ஐ லவ் யூ, ஐ லவ் யூ, ஐ லவ் யூ’ என டக்லஸை குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.