’பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தமிழக மக்களால் பரவலாக அறியப்பட்டவர் மீரா மிதுன். இவர் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த மீரா மிதுன், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி ஊடக வெளிச்சத்திலேயே இருந்தார்.
அவ்வப்போது சமூகவலைதளங்களில் சேரனை குறித்த வீடியோ, கவர்ச்சி போட்டோ, கவர்ச்சி வீடியோ, கவர்ச்சி நடனம் என ரசிகர்களை தன்பக்கம் ஈர்க்கும் வகையில் எதவாது செய்து கொண்டிருப்பார்.
தற்போதும் இதே போன்று ஒரு பதிவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘ஊழல், பெரும்பாலான சாம்ராஜ்யங்கள் - நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு மிகப்பெரிய காரணம். சிலபேர் லஞ்சத்தை பொறுத்துக்கொள்வார்கள். நான் தற்போது ஊழல் தடுப்பு பிரிவின் தமிழ்நாடு மாநில இயக்குநராக சேர்ந்துள்ளோன் (ஏ.சி.சி) நான் உங்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன். இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. ஊழல் இல்லா மாநிலத்தை உருவாக்க என்னுடன் கைகோருங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமும் குழப்பமமும் அடைந்தனர். இதன்பிண்ணனியை பார்க்கையில் லஞ்ச ஒழிப்பு மற்றும் குற்றத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நமது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படத்தைக் கொடுத்து குறிப்பிட்ட பணத்தை கட்டணமாக செலுத்தி லஞ்ச ஒழிப்புத்துறைக்கா அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.
இதில் மாவட்ட வாரிய, மாநில வாரிய, தேசிய அளவிலான மூன்று வித அடையாள அட்டை உள்ளது. இதில் மாநில அளவிலான அடையாள அட்டைக்கு பணம் செலுத்தி மீரா மிதுன் தனது சொந்த பெயரான தமிழ்செல்வி என்ற பெயரில் அடையாள அட்டையை வாங்கியுள்ளார். இந்த அட்டையை தனது சமூக வலைதளத்தில் பதவிட்டுள்ளார்.