சென்னை: நடிகை மீரா மிதுன் தனது சமூக வலைதளப் பக்கங்களை விற்பனை செய்யும் முடிவில் இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமாக அறியப்படும் மீரா மிதுன், சர்ச்சைக்கு பெயர் போனவர். நேற்று மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரை தனது ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். இன்று தனது சமூக வலைதளப் பக்கங்களை விற்பனை செய்யும் முடிவில் இருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், எனது இன்ஸ்டா, ட்விட்டர் பக்கங்களை விற்கும் முடிவில் இருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் getconnectedwithmeera@gmail.com என்ற மெயில் ஐடியை அனுகவும் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: என் தந்தையை கொலை செய்தது இவர்கள்தான்: மோடி, ஸ்டாலினை டேக் செய்து மீரா ட்வீட்