நடிகை மீரா சோப்ராவின் (நிலா) தந்தை நேற்று காலை வாக்கிங் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அவரை கத்தியைக் காண்பித்து மிரட்டி, அவரது தொலைபேசியை பறித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'எனது அப்பா காலையில் வாக்கிங் சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், கத்தியைக் காண்பித்து மிரட்டி, அப்பாவின் தொலைபேசியை பறித்துச் சென்றனர். இது தான் டெல்லியில் உள்ள பாதுகாப்பா?' என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும், டெல்லி காவல்துறையினரையும் டேக் செய்து, பதிவிட்டுள்ளார்.
-
Thanks @DcpNorthDelhi for such a quick action. Makes me proud when we feel protected by our police department. Its never abt what has been snatched but protecting our elders is most important! Respect @DelhiPolice https://t.co/KFmH0vTtFo
— meera chopra (@MeerraChopra) May 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thanks @DcpNorthDelhi for such a quick action. Makes me proud when we feel protected by our police department. Its never abt what has been snatched but protecting our elders is most important! Respect @DelhiPolice https://t.co/KFmH0vTtFo
— meera chopra (@MeerraChopra) May 5, 2020Thanks @DcpNorthDelhi for such a quick action. Makes me proud when we feel protected by our police department. Its never abt what has been snatched but protecting our elders is most important! Respect @DelhiPolice https://t.co/KFmH0vTtFo
— meera chopra (@MeerraChopra) May 5, 2020
இப்பதிவிற்கு பதிலளித்த டெல்லி காவல் துறையினர், 'முதல் தகவல் அறிக்கை, சம்பவம் நடைபெற்ற இடம் குறித்து தகவலைப் பகிருங்கள்’ என்று பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் காவல் துறையினரின் இந்த விரைவான நடவடிக்கை குறித்து மீரா சோப்ரா பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், 'மிக விரைவாக நடவடிக்கை எடுத்த டெல்லி காவல் துறையினருக்கு நன்றி. எங்கள் காவல் துறையினரால் பாதுகாக்கப்படுவதை உணரும்போது, எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டேனா?- இயக்குநர் பாரதிராஜா விளக்கம்