ETV Bharat / sitara

வாத்தி கம்மிங்: தீபாவளி பரிசாக வெளியாகும் 'மாஸ்டர்' டீசர்! - மாஸ்டர் தீபாவளி

சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

master
master
author img

By

Published : Nov 12, 2020, 6:08 PM IST

நடிகர் விஜய், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், ‘மாஸ்டர்’. கைதி பட புகழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நடந்துமுடிந்த நிலையில், பொது ஊரடங்கு காரணமாக படம் வெளியாகும் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ள பாடல்கள், அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள 'குட்டி ஸ்டோரி', 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

விஜய் ரசிகர்கள் 'மாஸ்டர்' பட அப்டேட்டை வெளியிடுமாறு படக்குழுவினருக்கு சமூக வலைதளம் வாயிலாக தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தனர். இந்தப் படம் குறித்தான முக்கிய அப்டேட் இன்று (நவம்பர் 12) மாலை 6 மணிக்கு வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து தற்போது மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளி பரிசாக நவம்பர் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பையடுத்து ரசிகர்கள் சமூக வலைதளப்பக்கத்தில் #Masterteaser என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடிவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.