ETV Bharat / sitara

லோக்கல் குத்தாக 'வாத்தி கமிங் ஒத்து' - மாஸ்டர் இரண்டாவது பாடல் - வாத்தி கமிங் பாடல்

விஜய்யின் நடன ஸ்டில்கள், அனிருத் மற்றும் பாடகர் கானா பாலசந்தரின் லோக்கல் குத்தாட்டத்தோடு 'மாஸ்டர்' படத்தின் 'வாத்தி கமிங்' என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

Master second single Vaathi coming lyric
Thalapathy vijay in Vaathi coming song
author img

By

Published : Mar 10, 2020, 7:26 PM IST

சென்னை: தளபதி விஜய் நடிக்கும் 'மாஸ்டர்' படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான 'வாத்தி கமிங்' வெளியிடப்பட்டது.

லோக்கலான வரிகளில், லோக்கல் குத்தாக அமைந்திருக்கும் 'வாத்தி கமிங்' பாடலை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் கானா பாலசந்தர் ஆகியோர் பாடியுள்ளனர். பாடலை எழுதியிருப்பதும் கானா பாலசந்தர்.

இதையடுத்து இவர்கள் இருவரும் தோன்றி நடனமாடுவதும், பாடல் உருவான விதத்தையும் காட்சிகளாக இணைத்துள்ளனர். அத்துடன் விஜய்யின் நடனம் அடங்கிய ஸ்டில்களும் இப்பாடலில் இடம்பெறுகிறது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'மாஸ்டர்' படத்தில் பேராசிரியராக தளபதி விஜய் நடித்துள்ள நிலையில், அவரது வருகையை முன்னிட்டு இந்தப் பாடல் படத்தில் இடம்பெறும் எனத் தெரிகிறது.

மேலும், கொண்டாட்ட பாடலாக அமைந்திருக்கும் இதில் விஜய்யின் வெயிட்டான நடனமும் அமைந்திருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் தளபதி விஜய் பாடிய 'குட்டி ஸ்டோரி' என்ற தமிழும், ஆங்கிலமும் கலந்த பாடலை முதல் சிங்கிள் பாடலாக வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து தற்போது இரண்டாவது சிங்கிளாக வாத்தி காமிங் என்று செம லோக்கல் பாடலை வெளியிட்டுள்ளனர்.

'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. படத்தை ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், இனி வரும் நாட்களில் படம் குறித்து அடுத்தடுத்து புதிய அப்டேட்களை எதிர்பார்க்கலாம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.