நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்றது. அதில், வழக்கம் போல் விஜய் தனது பாணியில் குட்டி ஸ்டோரி கூறி, ரசிகர்களை குஷிப்படுத்தினர்.
இன்று (ஏப்.9) இப்படம் வெளியாகவிருந்த நிலையில், கரோனா வைரஸ் தொற்று காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விஜய் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் #masterfdfs என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில், விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக மாஸ்டர் படக்குழுப் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
-
We miss you, just like how you miss us!
— XB Film Creators (@XBFilmCreators) April 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Hoping that a master-mind finds an antidote and put an end to Corona!
We'll come back stronger nanbaa.
Stay home, Stay Safe. #Master #StaySafe pic.twitter.com/MouTeUqlGn
">We miss you, just like how you miss us!
— XB Film Creators (@XBFilmCreators) April 9, 2020
Hoping that a master-mind finds an antidote and put an end to Corona!
We'll come back stronger nanbaa.
Stay home, Stay Safe. #Master #StaySafe pic.twitter.com/MouTeUqlGnWe miss you, just like how you miss us!
— XB Film Creators (@XBFilmCreators) April 9, 2020
Hoping that a master-mind finds an antidote and put an end to Corona!
We'll come back stronger nanbaa.
Stay home, Stay Safe. #Master #StaySafe pic.twitter.com/MouTeUqlGn
அதில் விஜய் தீவிர யோசனையில் அமர்ந்திருப்பது போன்று உள்ளார். அதில், இந்த ஊரடங்கு முடக்கம் நமது உத்வேகத்தைத் தடுக்க முடியாது...மாஸ்டர் உங்களை விரைவில் சந்திப்பார் என்று கூறியுள்ளனர். மாஸ்டர் ட்ரெய்லரை விரைவில் வெளியிட வேண்டும் எனவும், ரசிகர்கள் படக்குழுவினருக்குச் சமூகவலைதளம் மூலம் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.