Mari Selvaraj : அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான 'ராக்கி' படம் நேற்று முன்தினம் (டிச. 23) திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் அனைத்து உரிமையையும் நயன்தாரா விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் பெற்றுள்ளது. இத்திரைப்படம் திரையரங்கு வெளியீட்டுக்கு பின்னர் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் ட்விட்டரில் ராக்கி திரைப்படக் குழு குறித்து தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.
-
இயக்குனர் @ArunMatheswaran இயக்கத்தில் நண்பர் @iamvasanthravi நடிப்பில் வெளியாகியிருக்கும் “ராக்கி” பார்த்தேன் . மனித மனங்களின் எல்லையற்ற பழி உணர்ச்சியை பாசங்கற்ற ஒரு இருள் ஓவியமாக்கி வெற்றிபெற்றிருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துக்களும் ப்ரியமும்❤️ pic.twitter.com/EUyFzu2lsq
— Mari Selvaraj (@mari_selvaraj) December 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">இயக்குனர் @ArunMatheswaran இயக்கத்தில் நண்பர் @iamvasanthravi நடிப்பில் வெளியாகியிருக்கும் “ராக்கி” பார்த்தேன் . மனித மனங்களின் எல்லையற்ற பழி உணர்ச்சியை பாசங்கற்ற ஒரு இருள் ஓவியமாக்கி வெற்றிபெற்றிருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துக்களும் ப்ரியமும்❤️ pic.twitter.com/EUyFzu2lsq
— Mari Selvaraj (@mari_selvaraj) December 24, 2021இயக்குனர் @ArunMatheswaran இயக்கத்தில் நண்பர் @iamvasanthravi நடிப்பில் வெளியாகியிருக்கும் “ராக்கி” பார்த்தேன் . மனித மனங்களின் எல்லையற்ற பழி உணர்ச்சியை பாசங்கற்ற ஒரு இருள் ஓவியமாக்கி வெற்றிபெற்றிருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துக்களும் ப்ரியமும்❤️ pic.twitter.com/EUyFzu2lsq
— Mari Selvaraj (@mari_selvaraj) December 24, 2021
அதில், "இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நண்பர் வசந்த் ரவி நடிப்பில் வெளியாகியிருக்கும் “ராக்கி” பார்த்தேன். மனித மனங்களின் எல்லையற்ற பழி உணர்ச்சியை பாசாங்கற்ற ஒரு இருள் ஓவியமாக்கி வெற்றி பெற்றிருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துக்களும் ப்ரியமும்'' என குறிப்பிட்டுள்ளார்.
வசந்த் ரவி நடித்த 'தரமணி' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ராமிடம், மாரி செல்வராஜ் உதவி இயக்குநராக பணியாற்றியவர் எனபது குறிப்பிடத்தக்கது . மாரிசெல்வராஜின் ட்விட்டர் பதிவுக்கு 'ராக்கி' படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் படத்தில் நடிக்கிறாரா விஜயகாந்த்? - பிரேமலதா விளக்கம்