ETV Bharat / sitara

உங்களுடைய மிகப் பெரிய ரசிகன் நான் - மணிரத்னத்தை கவர்ந்த இயக்குநர் - மணிரத்னம்

பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட இருப்பதாகவும் பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் தான் இயக்க இருக்கும் புதிய படத்திற்கான கதை தற்போது உருவாகி வருவதாகவும் இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

Mani Ratnam
Mani Ratnam
author img

By

Published : Apr 16, 2020, 4:33 PM IST

மலையாள திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான லிஜோ ஜோஸ் பெல்லிசேரிக்கு தான் மிகப்பெரிய ரசிகன் என இயக்குநர் மணிரத்னம் கூறியுள்ளார்.

கரோனா தொற்று அச்சம் காரணமாக இந்தியாவில் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், திரை பிரபலங்கள் தங்களது குழந்தைகால புகைப்படங்கள், வீடியோ, லைவ் சாட், புகைப்படங்கள் போன்றவற்றை சமூகவலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களுடன் தொடர்பு வைத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, நடிகையும் இயக்குநருமான சுஹாசினி தனது சமூகவலைதளத்தின மூலம் பிரபலங்களுடன் உரையாடலை தொடங்கினார். அப்போது தனது கணவரும் இயக்குநருமான மணி ரத்னத்துடன் முதன் முறையாக சமூகவலைதளத்தில் உரையாடினார்

தற்போது படமாக உருவாக உள்ள கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் குறித்து கேட்கப்பட்டது. பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட இருப்பதாகவும் பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் தான் இயக்க இருக்கும் புதிய படத்திற்கான கதை தற்போது உருவாகி வருவதாகவும் கூறினார்.

அதே போல் மணிரத்னத்தை கவர்ந்த இயக்குநர் யார் என சுஹாசினி கேட்கையில், மலையாள திரைப்பட இயக்கநரும் தயாரிப்பாளருமான லிஜோ ஜோஸ் பெல்லிசேரி என்று கூறினார்.

Mani Ratnam
இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி

இந்த உரையாடலை லிஜோ ஜோஸ் பார்த்துக் கொண்டிருப்பதாக சுஹாசினி தெரிவித்தார். பின் லிஜோ கூறித்து மணி ரத்னம் கூறுகையில், லிஜோ நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன். நீங்கள் தற்போது மிகச்சிறந்த இயக்குநராக வலம் வருகிறீர்கள். வாழ்த்துக்கள். இதை அப்படியே தக்கவைத்துக்கொள்ளுங்கள். உங்களது படமான 'ஜல்லிக்கட்டு', 'E Ma Yau', 'அங்கமாலி டைரீஸ்', 'ஆமென்' ஆகிய படங்கள் மிகவும் கவர்ந்ததாக தெரிவித்தார்.

இந்தியாவின் மிக சிறந்த இயக்குநரிடம் இருந்து இளம் இயக்குநரின் திறமைக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பது மிக பெரிய விஷயம் என நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் சிலாகித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.