நடிகர் விஷால் சொந்தமாக விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார்.
இந்தத் தயாரிப்பு நிறுவனம் சென்னை வடபழனியில் இயங்கிவருகிறது. 'பூஜை', 'சண்டக்கோழி- 2' உள்ளிட்ட பல்வேறு படங்களை விஷாலின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து உள்ளது.
இந்நிலையில் இந்த நிறுவனத்தின் மேலாளர் ஹரி, வடபழனி உதவி ஆணையர் ஆரோக்கியம் பிரசாத்திடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரியில் 45 லட்சம் ரூபாய் வரை கையாடல் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பணத்தை அந்நிறுவனத்தில் பணிப்புரியும் பெண் ஒருவர் கையாடல் செய்துள்ளார் என்றும் அதுகுறித்து விசாரணை நடத்தக்கோரியும் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட உதவி ஆணையர், விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் விருகம்பாக்கம் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்டு உள்ளதால் உடனடியாக அதனை விசாரிக்கக் கோரி விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகாரை அனுப்பினார். அதனடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க... 'நான் அவர மிஸ் பண்றேன்' - விஷால் குறித்து மிஷ்கின்