சென்னை: மாங்காடு, கோவூர் சேக்காடு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண், சினிமா இயக்குநராக பணிப்புரிந்து வருகிறார். இவர் இன்று (அக். 11) விடியற்காலை 4 மணியளவில் தனது வீட்டு குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது குளியலறையில் எக்சாஸ் வழியாகப் பார்த்தபோது ஒரு நபர் செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவர் கூச்சலிட, உடனே அருகில் இருந்தவர்கள் அவரை ஒடிச்சென்று பிடித்தனர். தொடர்ந்து இதுகுறித்து காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மணி அருள்(26) என்பது தெரியவந்தது.
மேலும் அவரது செல்போனை பறித்து பார்த்தபோது தனது அக்கா மகளையும் ஆபாசமாக வீடியோ எடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து மணி அருளை கைது செய்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.