புதிய தொழில்நுட்பங்களின் வருகையால் குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்களைப் பற்றி பேசும் படமாக உருவாகியது '#ஹோம்'. அமேசான் பிரைம் ஓடிடியில் மலையாளத்தில் வெளியான இப்படத்தை ரோஜின் தாமஸ் இயக்கிருந்தார்.
'#ஹோம்' திரைப்படத்தில், நடிகர்கள் இந்திரன்ஸ், ஸ்ரீநாத் பாசி, விஜய் பாபு, நடிகை மஞ்சு பிள்ளை உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தை விஜய் பாபுவின் தயாரிப்பு நிறுவனமான 'ஃப்ரைடே ஃபிலிம் ஹவுஸ்' நிறுவனம் தயாரித்திருந்தது.
எளிமையான கதைக்களம் கொண்ட '#ஹோம்' படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப் பிரபலங்கள் பலரும் பாராட்டினர். தற்போது இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதனை பிரபல தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ரா - விஜய் பாபுவின் ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
-
Delighted to announce that we have joined hands with @VijaybabuFFH #FridayFilmHouse to remake the critically-acclaimed Malayalam film, #Home in Hindi. Excited to collaborate with Friday Film House again after working together on the Hindi remake of the cult film #AngamalyDiaries pic.twitter.com/eoGJtOj1jR
— Abundantia (@Abundantia_Ent) October 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Delighted to announce that we have joined hands with @VijaybabuFFH #FridayFilmHouse to remake the critically-acclaimed Malayalam film, #Home in Hindi. Excited to collaborate with Friday Film House again after working together on the Hindi remake of the cult film #AngamalyDiaries pic.twitter.com/eoGJtOj1jR
— Abundantia (@Abundantia_Ent) October 7, 2021Delighted to announce that we have joined hands with @VijaybabuFFH #FridayFilmHouse to remake the critically-acclaimed Malayalam film, #Home in Hindi. Excited to collaborate with Friday Film House again after working together on the Hindi remake of the cult film #AngamalyDiaries pic.twitter.com/eoGJtOj1jR
— Abundantia (@Abundantia_Ent) October 7, 2021
இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. முன்னதாக விக்ரம் மல்ஹோத்ரா - விஜய் பாபு கூட்டணி மலையாளத்தில் வெளியான 'அங்கமாலி டைரீஸ்' படத்தை இந்தியில் ரீமேக் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.