இயக்குநர் ராஜமௌலி தனது அடுத்தப் படமான RRR படத்தில் பிஸியாக இருந்து வந்தார். இந்நிலையில் அவர் நடிகர் மகேஷ் பாபுவை, தனது அடுத்தப் படத்தில் நடிக்க வைக்கவுள்ளதாக தகவல் கசிந்துகொண்டிருந்தது.
இதையடுத்து இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் ஒரு பேட்டியில் தனது அடுத்தப் படத்தை மகேஷ் பாபுவை வைத்து இயக்கவுள்ளதாக ராஜமௌலி பதில் அளித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மேலும் அந்தத் திரைப்படத்தை கே. எல். நாரயணா தயாரிப்பதாகவும் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு இந்தத் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும்; அந்தப் படம் 2022இல் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து மகேஷ் பாபுவின் ரசிகர்கள் ஆனந்த அதிர்ச்சியில் மிதந்து கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க... அனல் பறக்கும் ராஜமௌலியின் ’RRR’ மோஷன் போஸ்டர் வெளியீடு!