சூர்யா நடிப்பில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த 'சூரரைப் போற்று' இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
இப்படத்தின் இந்தி உரிமைகள் குறித்து சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனை விசாரித்த நீதிபதிகள் சூரரை போற்று இந்தி ரீமேக் செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
தற்போது வழக்கு ஆதாரமற்றது என்று அந்த படத்தை தயாரித்த 2D எண்டர்டெய்ன்மென்ட் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து 2D எண்டர்டெய்ன்மென்ட் தலைமை நிர்வாக அலுவலர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் அளித்துள்ள விளக்கத்தில், கேப்டன் கோபிநாத் அவர்களிடம் இருந்து படத்துக்கான உரிமையை பெற்று தந்ததற்கு உண்டான பணத்தை சிக்யா எண்டர்டெய்ன்மென்டிற்க்கு பேசியபடி வழங்கிவிட்டது.
கோபிநாத்துக்கு தந்த பணத்தை தவிர, சிக்யா எண்டர்டெய்ன்மென்டிற்க்கு ரூ 3 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் தொடர்ந்த இந்த வழக்க்கில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லை.
எந்த ஒரு அடிப்படையும் இன்றி பட வேலைகளை தாமதப்படுத்தவும், அதிகமாக பணம் பெறும் நோக்கத்துடனும் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். எங்கள் தரப்பின் நியாயங்களை நிரூபிக்க தேவையான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன” என்றார்.
இதையும் படிங்க: சூர்யாவின் 'சூரரைப் போற்று' - இந்தியில் ரீமேக்