மாதவன் தற்போது 'ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தை இயக்கி நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் மாதவன் 'மாறா' என்ற படத்திலும் நடித்துவருகிறார். மலையாளத்தில் துல்கர் சல்மான்-பார்வதி நடிப்பில் வெளியான 'சார்லி' திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் திலீப் குமார் இயக்குகிறார். 'விக்ரம் வேதா' படத்தைத் தொடர்ந்து 'மாறா' படத்தில் மாதவனுடன் இரண்டாவது முறையாக இப்படத்திலும் ஷ்ரதா ஸ்ரீநாத் இணைந்துள்ளார்.
அலெக்சாண்டர் பாபு, மினன் ஜான் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரமோத் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். தீபக் பகவான் ஒளிப்பதிவு செய்கிறார். காதலை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் தாமரையின் வரிகளில் வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்தப் படம் அமேசான் ப்ரைமில் டிசம்பர் 17ஆம் தேதி வெளியாக இருந்தநிலையில், தற்போது 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.