சுதந்திர தினம், ரக்ஷா பந்தன், ஆவணி அவிட்டம் ஆகிய மூன்றிற்கும் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் போட்டோ ஒன்றை பதிவிட்டிருந்தார் நடிகர் மாதவன். அதனை பார்த்த நெட்டிசன் ஒருவர், "புகைப்படத்தில் உங்களுக்கு பின்னால் உள்ள பூஜை அறையில் இந்து கடவுள்களுக்கு மத்தியில் சிலுவை. நான் உங்கள் மீது மதிப்பு வைத்திருந்தேன் அதனை இழந்து விட்டீர்கள். எதற்கு இந்த நாடகம்" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
![பதிலடி கொடுத்த மாதவன்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4156941_tweet.jpg)
அதற்கு மாதவன் ட்விட்டரில் பதில் அளித்துள்ளதாவது, "உங்களைப் போன்றவர்களிடம் எனக்கு மரியாதை கிடைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனென்றால் நீங்கள் சரியான மனநிலையில் இல்லை. படத்தில் சிலுவை இருப்பதை பார்த்த நீங்கள், அதற்கு பக்கத்தில் பொற்கோயிலின் படத்தை பார்க்க தவறிவிட்டீர்கள். அதனை பார்த்திருந்தால் நான் சீக்கிய மதத்திற்கு மாறிவிட்டேன் என்று கூறுவீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பூஜை அறையில் உள்ள பொருட்கள் அனைத்தும் பரிசாக வந்தவை. சில பொருட்கள் நான் விருப்பப்பட்டு வாங்கி வைத்தவை. என்னை பொருத்தவரையில் 'எம்மதமும் சம்மதம்' அதுவே சிறு வயதில் இருந்து எனக்கு கற்றுத்தரப்பட்டுள்ளது. ஆகவே அனைத்து மதத்தையும் நான் மதிப்பேன், எல்லா கடவுள்களையும் வணங்குவேன்" என்றார்.