நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் ’சார்லி’. இதையடுத்து இத்திரைப்படம் தற்போது தமிழில் ’மாறா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அறிமுக இயக்குநர் திலீப் குமார் இயக்கும் இப்படத்தில் மாதவன், ஸ்ரத்தா ஶ்ரீநாத் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
காதலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் ’மாறா’ படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் (டிச.29) வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
![மாறா பட ட்ரெய்லர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-maara-trailer-script-7205221_31122020115851_3112f_1609396131_1005.jpg)
இந்நிலையில் யூ-டியூப் தளத்தில் ’மாறா’ பட ட்ரெய்லரை தற்போது வரை ஒருகோடிக்கும் அதிகமானோர் பார்த்து ரதித்துள்ளனர். இதைப் படக்குழு மிகவும் மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மாறா திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வரும் 8ஆம் தேதி வெளியாயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிம்பு படத்தில் இணைந்த பிரியா பவானி சங்கர்!