மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான படம், ‘மாறா’. மலையாளத்தில் வெளியான ’சார்லி’ படத்தின் ரீமேக்காக வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
இயக்குநர் திலீப் குமார் இயக்கியுள்ள இப்படத்தின் கலை, இயக்கம் தனித்த அளவில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. அதிலும் படத்தில் காட்டப்பட்ட பழமையான கட்டடங்கள், அதில் வரையப்பட்டிருக்கும் பிரமாண்ட ஓவியங்கள் என்று கலை இயக்குநர் அஜயன் செலிசேரி அசத்தியுள்ளார். இவரின் ஓவியத்தை பார்த்து பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
ஏற்கனவே அஜயன் செலிசேரி மகேஷிண்ட பிரதிகாரம், பறவ, வரதன் மற்றும் ட்ரான்ஸ் படங்கள் மூலம் கலை இயக்கத்தில் பெரும் பாராட்டை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.