நடிகர் சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'மாநாடு'. இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், கரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இப்படம் குறித்தான அப்டேட்களை தருமாறு சிம்பு ரசிகர்கள் படக்குழுவினர் இடையே அவ்வப்போது சமூக வலைதளம் வாயிலாக கேட்டு வந்தனர்.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நவம்பர் முதல் வாரத்தில் இருந்து மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இப்படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, எஸ்.ஏ.சி.சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், பிரம்ஜி அமரன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
வெங்கட் பிரபு ஜாலியாக படம் எடுக்கக் கூடியவர் என்ற பிம்பத்தை உடைக்க முதன் முறையாக சிம்புவுடன் இணைந்து அரசியல் படத்தை இயக்கி வருகிறார்.
நவம்பரில் மீண்டும் ஆரம்பமாகும் சிம்புவின் 'மாநாடு' - இயக்குனர் வெங்கட் பிரபுவின் படங்கள்
சென்னை: சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு படத்தின் புதிய அப்டேட்டை சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.