ETV Bharat / sitara

ஓணம் வாழ்த்துகள்: 'தர்பார்' லைகா நிறுவனத்தின் சர்ப்ரைஸ்! - ரஜினி

ரஜினி நடிப்பில் உருவாகிவரும் 'தர்பார்' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

darbar
author img

By

Published : Sep 11, 2019, 1:08 PM IST

Updated : Sep 11, 2019, 1:28 PM IST

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'தர்பார்'. 'சர்கார்' படத்திற்கு பிறகு முருகதாஸ் ரஜினியை வைத்து இயக்கும் படத்தில் காவல் துறை அலுவலராக நடித்துவருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது.

இதில் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ’தர்பார்’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது ட்ரெண்டாகிவந்தன.

தற்போது ஓணப்பண்டிகையை முன்னிட்டு லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓண வாழ்த்துகளை தெரிவித்து தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக்கும், ரஜினியின் வித்தியாசமான தோற்றமும் இணையத்தை கலக்கிவந்த நிலையில் செகண்ட் லுக் போஸ்டர் வரவை எதிர்பார்த்து ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர். இப்படம் 2020 பொங்கலுக்கு வெளியிட உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

Intro:ராசிபுரம் அருகே குளியலறையில் 8 அடி நீள சாரை பாம்பு.. அதிர்ச்சியில் அக்கம் பக்கத்தினர்...
Body:புதர்கள் நிறைந்த ராசிபுரம் காவல்துறை குடியிருப்பில் இருந்து சாரை பாம்பு வந்ததால் நகராட்சி நிர்வாகம் புதர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அதிமுக பிரமுகரும் மோகனூர் சர்க்கரை ஆலையின் தலைவருமான சுரேஷ் என்பவர் வீட்டில் 8 அடி நீள கருஞ்சாரை பாம்பு புகுந்தது.
பாம்பைக் கண்ட குடும்பத்தினர் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தனர். இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் பாம்பை விரட்டலாம் என நினைத்தபோது அது பாத்ரூம் உள்ளே சென்று மறைந்தது. இதனால் பாத்ரூம் கதவை திறந்தால் கடித்து விடும் என்ற பயத்தில் பாம்பு பிடிக்கும் வீரர்கள் இருவரை தகவல் கொடுத்து வர சொன்னார்கள்.
அங்கு வந்த பாம்பு பிடி வீரர்கள் பாத்ரூமில் உள்ள வாஷிங் மெஷின் அடியில் பதுங்கி இருந்த 8 அடி நீள சாரைப் பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப் பையில் அடைத்து போதமலை மலைப்பகுதியில் விட்டனர் .

மேலும் இந்த குடியிருப்பின் பக்கவாட்டில் உள்ள காவல்துறை அதிகாரிகளின் குடியிருப்பு பகுதியில் அதிக புதர்கள் மண்டி கிடப்பதால் அந்தப் பகுதியிலிருந்து சிறு துவாரம் வழியாக இந்த பாம்பு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
எனவே இந்தப் பகுதியில் உள்ள முள் புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Conclusion:
Last Updated : Sep 11, 2019, 1:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.