ஆஸ்திரேலியாவில் கட்டுங்கடங்காமல் எரிந்து வரும் காட்டுத்தீயால் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு உதவும் வகையில், டிகாப்ரியோவின் சூழலியல் தொண்டு நிறுவனம் மூன்று மில்லியன் டாலர்கள் நிவாரண நிதி வழங்க முன்வந்துள்ளது.
காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பாதிப்புகளுக்கு உதவும் வகையில் ’எர்த் அலையன்ஸ்’ எனும் தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் லியோனார்டோ டிகாப்ரியோ, இந்நிறுவனத்தின் மூலம் ஆஸ்திரேலியக் காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண நிதியை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் எரிந்து வரும் இந்தக் கட்டுங்கடங்காத காட்டுத்தீயால் அமெரிக்காவைப் போன்று, சுமார் இரண்டு மடங்கு பகுதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2000 வீடுகள் சேதத்திற்குள்ளாகியும், கோடிக்கணக்கிலான வனவிலங்குகள் கொல்லப்பட்டும், 25 நபர்கள் மடிந்தும் உள்ளனர்.
ஏற்கெனவே கிரிஸ் ஹேம்ஸ்வொர்த், எல்டன் ஜான் போன்ற ஆஸ்திரேலிய நடிகர்களும், நிக்கோல் கிட்மேன், கைலி ஜென்னர், கெய்த் அர்பன் போன்ற பல பிரபலங்களும் நிவாரண நிதி வழங்கியுள்ள நிலையில், தற்போது டிகாப்ரியோ தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அறிவார்ந்த கதாபாத்திரம் பேட்மேன் - ராபர்ட் பேட்டின்சன் பெருமிதம்!