கேடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இலியானா. இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். விஜய் நடித்த நண்பன் படத்தில் ரீ என்ட்ரி ஆனார். இப்படத்திற்கு பிறகு தமிழில் பெரிய அளவில் படவாய்ப்புகள் வரவில்லை. அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு நெட்டிசன்களை திக்குமுக்காட வைப்பார்.
இதனிடையே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் நீண்ட நாட்களாக டேட் செய்துவந்த நிலையில் திடீரென காதல் முறிவு ஏற்பட்டது. இந்நிலையில், அவர் தனது ட்விட்டரில், 'தனக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கும் என நினைக்கிறேன். இல்லை என்றால் தினமும் நான் எழும்போது எனது காலில் எப்படி காயங்கள் இருக்கிறது' என கவலையுடன் பதிவிட்டுள்ளார்.
![இலியானா லேட்டஸ்ட் புகைப்படம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4462602_ile.jpg)
இவரது பதிவைப் பார்த்த நெட்டிசன்கள், பேய் படமான கான்ஜூரிங் படத்துடன் ஒப்பிட்டு கேலி செய்து வருகின்றனர். ஒருவேளை இலியானாவுக்கு பேய் பிடித்திருக்கக் கூடும் என்றும் பேய் படத்தில் நடிப்பதற்கான ஒத்திகையா என்றும் தெரிவித்து வருகின்றனர். இதில் ஒரு சிலர், வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தி சோதனையிடவும் மருத்துவரை அணுகுவது நல்லது என்றும் கூறி வருகின்றனர்.
இதற்கு பதில் அளித்த இலியானா, இரவில் நொறுக்குத் தீனிகளை தேடி படுக்கை முதல் ஃப்ரிட்ஜ் வரை நடந்து திரிவதாக கேலியாக தெரிவித்துள்ளார்.