ETV Bharat / sitara

விஜய் சேதுபதியின் 'லாபம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு! - சென்னை

விஜய் சேதுபதி நடித்துள்ள 'லாபம்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

'லாபம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு
'லாபம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு
author img

By

Published : Aug 25, 2021, 7:31 PM IST

மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், தன்ஷிகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'லாபம்'. இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து அதிலுள்ள 'உணவு அரசியல்' குறித்து இப்படம் பேசியுள்ளது. இதனை இயக்கிக்கொண்டு இருந்தபோதே இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் உயிரிழந்தார்.

விஜய் சேதுபதி நடித்துள்ள 'லாபம்'
விஜய் சேதுபதி நடித்துள்ள 'லாபம்'

இப்படத்தின் எஞ்சிய காட்சிகளை அவரது உதவி இயக்குநர்கள் எடுத்துள்ளனர். பட வெளியீட்டுக்கு, ஓடிடி வெளியீட்டை தவிர்த்து திரையரங்குகள் திறக்கும் வரை படக்குழு காத்திருந்தது. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் படத்தை வெளியிட படக்குழுவினர் ஆயத்தமாகியுள்ளனர்.

'லாபம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு
'லாபம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

அதன்படி வரும் செப்டம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் 'லாபம்' படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'பொன்னியின் செல்வனில் இருந்து விடைபெற்ற ஜெயம் ரவி!'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.