சூர்யா அறிமுகமான ‘நேருக்கு நேர்’ படத்தில் கே.வி. ஆனந்த் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். தற்போது ‘காப்பான்’ படத்தோடு சேர்த்து சூர்யாவை வைத்து மூன்று படங்களை இயக்கியிருக்கிறார் கே.வி. ஆனந்த்.
சூர்யாவின் இந்த வளர்ச்சி குறித்து தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த கே.வி. ஆனந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், ‘நேருக்கு நேர்’ படத்தோடு சூர்யா ஓடிவிடுவார் என நினைத்தேன். ரொம்ப அப்பாவியாக இருப்பார், நடிக்க சிரமப்பட்டார். ஆனால் பாலா, அமீர், கவுதம் மேனன் போன்ற இயக்குநர்களுடன் பணியாற்றிய பிறகு நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டார். நான் அவரை வைத்து ‘அயன்’ படம் எடுக்கும்போது முழுமையான நடிகராக இருந்தார். மிக எளிதாக அந்த கதாபாத்திரத்தை கையாண்டார் என தெரிவித்துள்ளார்.