ETV Bharat / sitara

முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த நடிகை குஷ்பூ - எடப்பாடிக்கு நன்றி தெரிவித்த குஷ்பூ

ஊரடங்கு காரணமாக தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்பை தொடங்க அனுமதி வழங்கப்பட்டதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும் தென்னிந்திய தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக, சங்கப் பொதுச் செயலாளர் குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.

kushboo thanks TN CM  for allowing serials shooting

author img

By

Published : May 23, 2020, 12:32 PM IST

தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்பு தொடங்க அனுமதி வழங்கியமைக்காக தென்னிந்திய தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் (STEPS) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தென்னிந்திய தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் சுஜாதா விஜயகுமார் பேசுகையில், "கடந்த இரண்டு மாதங்களாக படப்பிடிப்பு இல்லாததால் எங்கள் தொழிலாளர்கள் பலர் அவதிப்பட்டனர். படப்பிடிப்பு மீண்டும் தொடங்க எங்களுக்கு அனுமதி வழங்கிய முதலமைச்சருக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். படப்பிடிப்பின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க பல தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்களுடன் நாங்கள் இன்று ஜூம் மூலம் ஒரு கூட்டத்தை நடத்தினோம். முன்னதாக, நானும் ஸ்டெப்ஸ் பொதுச் செயலாளருமான குஷ்பூவும், தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்க கோரிக்கை வைத்தோம். அதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுச் செல்வேன் என்று உறுதியளித்தார். படப்பிடிப்பு தொடங்க எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்ற நற்செய்தியை அவர் துரிதமாக கூறினார். இந்தச் சந்தர்ப்பத்தில் அமைச்சருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

சுஜாதா விஜயகுமார்

தென்னிந்திய தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் குஷ்பு பேசுகையில், "கடந்த 70 நாள்களாக படப்பிடிப்பு இல்லாததால் எங்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டனர். நிலைமையைப் பார்த்து, படப்பிடிப்பை மீண்டும் தொடங்க எங்களுக்கு அனுமதி வழங்க அமைச்சர் கடம்பூர் ராஜூவை அணுகினோம். இப்போது சில கட்டுப்பாடுகளுடன் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான அனுமதி எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி எங்களுக்கு ஒரு வரமாக வந்துள்ளது. ஜூம் அழைப்பு மூலம் அனைத்து விஷயங்களையும் பல்வேறு தொலைக்காட்சிகளில் உள்ள மெகா தொடர் தயாரிப்பாளர்களிடம் விவாதித்தோம். எப்போது விரைவில் படப்பிடிப்பு தொடங்குவது என்பது குறித்து நாங்கள் முடிவெடுப்போம். அரசாங்கம் வகுத்துள்ள விதிகள், பாதுகாப்பு வழிகாட்டுதல்களை நாங்கள் பின்பற்றுவோம் என்று உறுதியளிக்கிறோம். மிக விரைவில், நாங்கள் வேலையைத் தொடங்குவோம். ஒரு நல்ல செய்தி விரைவில் உங்கள் அனைவரையும் வந்தடையும்" என்றார்.

நன்றி தெரிவித்த குஷ்பூ

இதையும் படிங்க... சின்னத்திரை படப்பிடிப்பை தொடர நிபந்தனைகளுடன் அனுமதி - முதலமைச்சர் பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.