சமந்தா- நாக சைதன்யா சமீபத்தில் திருமண வாழ்க்கையிலிருந்து பிரிவதாக அறிவித்தனர். இதனை இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்தனர்.
இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து பலரும் இதற்கு சமந்தா தான் காரணம். அவர் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, குடும்பத்தைக் கண்டு கொள்ளவில்லை என சமூக வலைதளங்களில் வசைப்பாடினர்.
இதனால் கடுப்பான சமந்தா நேற்று (அக்.8) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "நாங்கள் விவாகரத்து செய்து கொண்டதற்கு ஏகப்பட்ட வதந்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. எனக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருக்கிறது.
குழந்தை வேண்டாம் என்று கருவை கலைத்ததாகவும் வதந்திகள் வருகின்றன. இவை அனைத்தும் தவறான வதந்திகள். விவாகரத்து என்பது மிகுந்த வலியைக் கொடுக்கும்.
அதிலிருந்து நான் வெளியேற எனக்கு இன்னும் அவகாசம் தேவைப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். இவரின் பதிவிற்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங், சமந்தா பதிவு குறித்து, 'உறுதியோடு இருங்கள் என ஸ்மைலி' மூலம் தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகை மஞ்சிமா மோகன், 'உறுதியோடு இருங்கள் சேம்' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:டாக்டர் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்