ETV Bharat / sitara

பாடகர் கன்யே ஏன் விவாகரத்து செய்வேன் என்று பதிவிட்டார்?- ரகசியத்தை வெளியிட்ட மனைவி! - கிம் கர்தாஷியன்

நடிகை கிம் கர்தாஷியன் தனது கணவர் ஏன் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தார் என்பது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Kim
Kim
author img

By

Published : Jul 23, 2020, 5:20 PM IST

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் இசை பாடகர் கன்யே வெஸ்ட். இவர் சமீபத்தில், தான் அமெரிக்காவின் அடுத்த அதிபர் என்றும், ட்ரம்புக்கு எதிராகப் போட்டியிடப்போவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

அதேபோல் நடிகையும், தனது மனைவியுமான கிம் கர்தாஷியனை விவாகரத்து செய்யப்போவதாகவும் பதிவு வெளியிட்டுவிட்டு உடனே நீக்கிவிட்டார். அவர் எதற்காக விவாகரத்து செய்கிறார், என்று எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து நடிகை கிம் கர்தாஷியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கன்யேவுக்கு பைபோலார் டிஸார்டர் (Bipolar disorder) இருப்பது தெரியும் என்று நினைக்கிறேன். இந்த நோய் இருப்பவர்கள் யாரையாவது உங்களுக்குத் தெரிந்திருந்தால், அவர்களைப் புரிந்துகொள்வது எவ்வளவு சிக்கலானது மற்றும் வேதனையானது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

கன்யே ஒரு புத்திசாலி. ஆனால் சிக்கலான நபர். அவர் தனது தாயின் இழப்பை அனுபவித்திருக்கிறார். அவரது பைபோலார் டிஸார்டர் அதிகரிக்கும் போது அழுத்தம் மற்றும் தனிமை ஆகியவற்றைச் சமாளிக்க முடியாமல் சிரமப்படுவார்.

மேலும் நமக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து வரும் சில வார்த்தைகள், மனதார சொல்வது இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.