இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலையால் பெரும்பாலான மாநிலங்களில் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் இன்றி பிற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் சினிமா கூலித்தொழிலாளர்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் திரை பிரபலங்கள் உதவி புரிந்து வருகின்றனர். அந்த வகையில் கன்னட சினிமா தொழிலாளர்கள் 3 ஆயிரம் பேருக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் அனைவரது வங்கி கணக்கிலும் செலுத்த 'கே.ஜி.எஃப்' நடிகர் யாஷ் ரூ. 1.5 கோடி நன்கொடை அளிக்க முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து யாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,ஃ "நாடு முழுவதும் பலரின் வாழ்வாதாரத்தை பாதித்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத எதிரியாக கரோனா தொற்று உள்ளது. எனது சொந்த கன்னடத் திரைத்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசமான காலகட்டத்தை மனதில் கொண்டு திரைத்துறையின் 21 பிரிவுகளைச் சேர்ந்த 3 ஆயிரம் உறுப்பினர்களுக்கு எனது சொந்த செலவில் தலா ரூ. 5 ஆயிரம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்த உள்ளேன். இந்த சூழலால் ஏற்பட்டிருக்கும் வலி, இழப்புக்கு இது தீர்வாகாது என்பது எனக்குத் தெரியும். இது நம்பிக்கைக்கான கீற்று. நல்ல காலம் பிறக்கும் என்பதற்கான நம்பிக்கை" என அதில் குறிப்பிட்டுள்ளார்.
-
#togetherwestand #humanity pic.twitter.com/46FYT9pThz
— Yash (@TheNameIsYash) June 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#togetherwestand #humanity pic.twitter.com/46FYT9pThz
— Yash (@TheNameIsYash) June 1, 2021#togetherwestand #humanity pic.twitter.com/46FYT9pThz
— Yash (@TheNameIsYash) June 1, 2021
யாஷின் 'கே.ஜி.எஃப் 2' படம் ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில், தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் வெளியிட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.