ETV Bharat / sitara

சீயான் '#விக்ரம் 58'ல் இணைந்த 'கேஜிஎஃப்' நாயகி!

வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், ஹன்சிகா நடிக்கும் திகில் கலந்த நகைச்சுவைப் படத்தில் வில்லனாகவும், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நடிகர் சந்தானம் நடிக்கும் 'டிக்கிலோனா' என்ற படத்திலும்; இர்பான் பதான் #விக்ரம் 58 ஆவது படத்தில் என்ற ஸ்டைலிஷான கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளார்.

author img

By

Published : Oct 17, 2019, 12:00 PM IST

srinidhi shetty

#விக்ரம் 58 படத்தில் கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'டிமான்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' ஆகிய த்ரில்லர் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இப்படம் விக்ரமுக்கு 58ஆவது படமாகும். தற்காலிகமாக இப்படத்திற்கு '#விக்ரம் 58' என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் பத்துக்கும் மேற்பட்ட கெட் அப்களில் விக்ரம் வருவதால் அவரது மேக்-அப்பில் தனிக்கவனம் செலுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ - வியாகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீபத்தில் இந்தப் படத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஸ்டைலிஷான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ அறிவித்துள்ளது. இப்படத்தின் மூலம் ஸ்ரீநிதி ஷெட்டி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். இப்படத்தை ஏப்ரல் 2020இல் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க: மஜா பண்ண ரெடி... அன்பான புள்ளைங்களுக்கு இர்பான் பதான் தமிழில் ட்வீட்

Intro:Body:

Vikram 58 Movie in KGF ACTRESS

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.