பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம், 'கேஜிஎஃப்'.
நடிகர் யாஷ் நாயகனாக நடித்திருந்த இப்படம் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி, பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்தது. இப்படத்தின் தமிழ் வசனங்களும் பெரும் வரவேற்பைப் பெற்று இணையத்தை கலக்கின.
100 கோடி கிளப்பில் இணைந்த இப்படம் சிறந்த சண்டைக் காட்சி, சிறந்த வரைகலை (Vfx) ஆகிய இரண்டு பிரிவுகளில் தேசிய விருது பெற்றது.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'கேஜிஎஃப்' படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. இப்படத்தின் பணிகள் அனைத்தும் முன்னதாக நிறைவடைந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தினால் படத்தின் வெளியீடு தேதி தள்ளிப்போனது.
-
Glad to Announce #KGF2SouthOnZee @prashanth_neel @VKiragandur @hombalefilms @HombaleGroup @duttsanjay @TandonRaveena @SrinidhiShetty7@ZeeKannada @ZeeTVTelugu @ZeeTamil @ZeeKeralam pic.twitter.com/MEGcvhz8II
— Yash (@TheNameIsYash) August 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Glad to Announce #KGF2SouthOnZee @prashanth_neel @VKiragandur @hombalefilms @HombaleGroup @duttsanjay @TandonRaveena @SrinidhiShetty7@ZeeKannada @ZeeTVTelugu @ZeeTamil @ZeeKeralam pic.twitter.com/MEGcvhz8II
— Yash (@TheNameIsYash) August 20, 2021Glad to Announce #KGF2SouthOnZee @prashanth_neel @VKiragandur @hombalefilms @HombaleGroup @duttsanjay @TandonRaveena @SrinidhiShetty7@ZeeKannada @ZeeTVTelugu @ZeeTamil @ZeeKeralam pic.twitter.com/MEGcvhz8II
— Yash (@TheNameIsYash) August 20, 2021
இந்நிலையில் ’கே.ஜி.எஃப் 2’ படத்தின் சாட்டிலைட் உரிமை குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வெளியாகும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளின் சாட்டிலைட் உரிமையை ’ஜீ நிறுவனம்’ கைப்பற்றியுள்ளது.
இதனைப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். விரைவில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தள்ளிப்போன தனுஷ் - செல்வராகவன் படப்பிடிப்பு... காரணம் இதுதான்!