மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'லவ் ஆக்ஷன் டிராமா'. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் நிவின் பாலியின் புதிய படத்தைப் பற்றிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. நிவின் நடிக்கும் புதிய படத்திற்கு 'படவெட்டு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை லிஜூ கிருஷ்ணா இயக்குகிறார். இதில் நிவினுக்கு ஜோடியாக 'அருவி' அதிதீ பாலன் நடிக்கிறார். கோவிந்த் வசந்த் இசையமைக்கும் இப்படத்திற்கு மலையாள முன்னணி நடிகர் சன்னி வெயின் தயாரிக்கிறார். இப்படத்தின் மூலம் சன்னி வெயின் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
படத்தில் தொழிநுட்ப கலைஞர்கள், படத்தின் துணை கதாபாத்திரங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.