மூன்றாவது முறையாக சிம்பு- கெளதம் மேனன் கூட்டணி அமைத்துள்ள திரைப்படம், 'வெந்து தணிந்தது காடு'. சிம்புவின் 47ஆவது படமான இதை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இதில் சிம்புவிற்கு ஜோடியாக கயாடு லோகர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

புனேவை சேர்ந்த மாடலிங் அழகியான இவர் ஏற்கனவே கன்னட மொழியில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். இந்த செய்தி மட்டும் உறுதியானால் அவர், தமிழில் இந்த படம் மூலம் என்ட்ரி கொடுப்பார்.கனமான கதையுடன் படம் அமையும் என எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்களிடம் தற்போதிலிருந்தே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க: அது நிச்சயதார்த்த மோதிரம்: ஷாக் கொடுத்த நயன்தாரா