சென்னை: காவல் துறையின் காட்டப்படாத பக்கங்களைக் காட்டியிருப்பதாகக் கூறப்பட்ட 'காவல்துறை உங்கள் நண்பன்' படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் காவல் துறை காட்டும் அதிகாரத்தை வைத்து உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மார்ச் 11) நடைபெற்ற நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லரை இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் வெளியிட்டுள்ளார்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனுக்கும், காவல் துறையினருக்கும் இடையே நிகழும் சம்பவங்களைக் கொண்டு, அதிரவைக்கும் காட்சிகளோடு படத்தின் ட்ரெய்லர் அமைந்துள்ளது.
"நம்ம சாதாரண பப்ளிக், பப்ளிக் சர்வெண்ட்தான் அவங்க, ஒரு போலீஸ் - கிரிமினல் மாதிரி யோசிக்கலாம், சட்டம் பணம் இருக்கிறவங்களுக்கு வீட்டுநாய், இல்லாதவங்களுக்கு வெறிநாய், பிரச்னைனு போலீஸ் ஸ்டேஷன்ல காலடி எடுத்த வச்சா அது கால சுத்துன பாம்பு மாதிரி" போன்ற ஷார்ப்பான வசனங்களோடு அமைந்திருக்கும் ட்ரெய்லர் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
வெற்றிமாறனின் 'விசாரணை' படத்தில் காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் நடந்துகொள்ளும் குரூரத்தையும், அவர்களின் கயமைத்தனத்தையும் காட்டியது.
அதேபோல் இந்தப் படத்தில் நடுத்தர மக்கள் மீது காவல் துறை செலுத்தும் அதிகாரத்தை வெளிப்படுத்தும்விதமாக படத்தின் கதை அமைந்திருப்பதாகத் தெரிகிறது.
படத்தில் சுரேஷ் ரவி, பிரவீணா ரவி பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஆர்டிஎம் இயக்கியுள்ள இந்தப் படம் மார்ச் 20ஆம் தேதி திரைக்கு வருகிறது.