பட்லாபூர், அந்தாதுன் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமாக அறியப்படுபவர் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன். இவர் விஜய் சேதுபதியை வைத்து அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 15ஆம் தேதி தொடங்கும் எனப் படக்குழு தெரிவித்திருந்தது. ஆனால் அதற்குள் நடிகை கத்ரீனா கைஃபுக்கு கரோனா தொற்று உறுதியானதால் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது.
இதனையடுத்து சமீபத்தில் விஜய் சேதுபதி பேட்டி அளித்துள்ளார். அப்போது, “ஏப்ரல் 6ஆம் தேதி கத்ரீனாவுக்கு கரோனா இருப்பது தெரிந்தது. அதனால் படப்பிடிப்பு ரத்துசெய்யப்பட்டது.
எனக்கு தற்போது ராஜ், வெப் தொடர் படப்பிடிப்பு உள்ளது. அதனால் என்னால் படப்பிடிப்பில் எப்போது கலந்துகொள்ள முடியும் எனத் தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.