ETV Bharat / sitara

பெரியார்-ரஜினி விவகாரம்: ஆளுக்கொரு விதமா பேசினா எதை எடுத்துக்கிறது? அதிமுக அமைச்சர்களைச் சாடிய கஸ்தூரி - பெரியார் vs ரஜினிகாந்த்

பெரியார் குறித்து ரஜினி பேசிய விவகாரம் குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பெரியார்- ரஜினி விவகாரம் குறித்து கஸ்தூரி ட்வீட்

author img

By

Published : Jan 24, 2020, 2:49 PM IST

பெரியார் குறித்து துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் அதிமுக அமைச்சர்கள் சிலர் திடீரென்று ரஜினிகாந்த் ஆதரவாகப் பேசுகின்றனர். இதனால் தமிழ்நாடு மக்கள் யாரை நம்புவது என்று தெரியாமல் குழம்பியுள்ளனர் என்று குறிப்பிட்டு நடிகை கஸ்தூரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில், 'ஒரே நாளுலே ஒரே கட்சிக்காரங்க ஆளுக்கொருவிதமா பேசினா பாவம் மக்கள் எதைன்னு எடுத்துக்கறது? என்கினாச்சும் சொகுசு ரிஸார்ட்டுக்கு போயி கூடி ஒரு முடிவு எடுத்து வரலாமில்லை? அவங்க சொந்த மீடியாவே குழம்பறாங்க !

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் பெரியாரை விமர்சித்த ரஜினியை திமுகக்காரர்கள் தாக்காமல் நாசூக்காக வலிக்காமல் கருத்து சொல்கிறார்கள். திரு ஜெயக்குமார், ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள்தான் அதிகமாக எதிர்க்கிறார்கள். அதிலும் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் சௌந்தர்யாவையும் அவரது கணவர் விசாகனையும் பற்றி பேச அவசியம் என்ன ?

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

கொஞ்சம் யோசித்து பார்த்தால் இதிலுள்ள அரசியல் புரிகிறது. பெரியாரை புகழ்ந்த மாதிரியும் ஆயிற்று, ரஜினியை விமர்சித்த மாதிரியும் ஆயிற்று, திமுக பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த விசாகன் பெயரை இழுத்ததன் மூலம் திமுகவை தர்மசங்கப்படுத்திய மாதிரியும் ஆயிற்று. பாவம் திமுக , rajni 168 , சன் pictures, red giant புண்ணியத்தில் ஏற்கனவே திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில்தான் உள்ளனர்.

கடந்த எத்தனையோ வருடங்களாக அதிமுகவை யாரும் பெரியாருடன் இணைத்து பார்த்ததில்லை. ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கையும் கொள்கைகளும் பெரியாரிய அரசியலும் எதிர் எதிர் துருவங்கள். மேலாக, பிஜேபியும் அதிமுகவும் தோழமை கட்சிகள் என்னும்போது அம்மா வழிவந்த அமைச்சர்கள், இன்று இப்படி பேசுவதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்? ஒருவேளை ரஜினி வந்துவிட்டால் அதிமுகவை பிஜேபி இரண்டாம் பட்சமாக நடத்தும் என்ற சந்தேகமோ?' என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: அழகே... வைரலாகும் நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.