ETV Bharat / sitara

கமலும் ரஜினியும் அரசியலில் இணைந்தால்? - கொளுத்திப்போடும் கஸ்தூரி..!

author img

By

Published : Nov 22, 2019, 3:43 PM IST

Updated : Nov 22, 2019, 4:15 PM IST

கமலும் ரஜினியும் அரசியலில் இணைந்தால் எப்படி இருக்கும் என்பது பற்றி நடிகை கஸ்தூரி ட்வீட் செய்திருக்கிறார்.

kasthuri

தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவுக்கு பின்னர் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் ஒத்த கருத்துகளை அவ்வப்போது தெரிவித்து அதனை அன்றைய விவாதப்பொருளாக மாற்றி வருகின்றனர்.

கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி ஏற்கனவே அரசியல் களத்தில் குதித்துவிட்டார். ஆனால் அவருக்கு முன்பே அரசியல் கட்சி தொடங்கப்போகிறேன் என்று சொல்லி வந்த ரஜினி இதுவரை கட்சி தொடங்கவில்லை.

kamalhaasan
ரஜினிகாந்த் - கமல் ஹாசன்

2021இல் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ரஜினி கட்சி தொடங்கிவிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள போதிலும் சமீபகாலமாக ரஜினி அரசியல் ரீதியாக பல்வேறு அதிரடி கருத்துகளைக் கூறி வருகிறார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார் என்று நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார், 2021இல் அதிசயம் நிகழும், தமிழ்நாடு அரசியலில் வெற்றிடம் இருக்கிறது, தன் மீது அரசியல் சாயம் பூசப்பார்க்கிறார்கள் உள்ளிட்ட அவரது சமீபத்திய கருத்துக்கள் பேசுபொருளாக மாறி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

2021ல் அதிசயம் நிகழும் - ஆருடம் சொன்ன ரஜினிகாந்த்!

அதோடு மட்டுமல்லாமல் ரஜினியுடன் கமல் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற பேச்சுக்களும் அடிபடுகிறது. இருவரும் இணைந்து செயல்பட போவதாக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒத்திசைந்து நடப்பது போலவே கமலும் கருத்து தெரிவித்திருக்கிறார். நாங்கள் இணைவது முக்கியமல்ல; மக்களின் வளர்ச்சிதான் முக்கியம் என்று தெரிவித்ததே இதற்கு சான்றாக உள்ளது.

kamalhaasan
ரஜினிகாந்த் - கமல்ஹாசன்

சினிமாவில் இந்த இருவரும் ஏற்கனவே மூன்று முடிச்சு, அவர்கள், 16 வயதினிலே, அலாவுதீனும் அற்புத விளக்கும், அபூர்வ ராகம், ஆடு புலி ஆட்டம், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர்.

திரையில் இணைந்து நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இந்த கூட்டணி நிஜ வாழ்க்கையிலும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். இருவரும் அரசயலில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதனிடையே நடிகை கஸ்தூரி ட்வீட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில், 'கமலும் ரஜினியும் அரசியலில் இணைந்தால் அது அபூர்வ ராகமா, ஆடு புலி ஆட்டமா ? நினைத்தாலே இனிக்கும் ! #அதிசயம்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

  • கமலும் ரஜினியும் அரசியலில் இணைந்தால் அது அபூர்வ ராகமா ஆடு புலி ஆட்டமா ? நினைத்தாலே இனிக்கும் ! #அதிசயம்

    Healthy approach , positive politics , unexpected twist ! If this was a movie, it would be a blockbuster! #RajiniKamal@ikamalhaasan @rajinikanth pic.twitter.com/jcq4mLTMyD

    — Kasturi Shankar (@KasthuriShankar) November 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கஸ்தூரியின் இந்தப் பேச்சு வெரும் பேச்சாகவே இருக்கும், நடந்தால் நல்லது போன்ற கருத்துக்களுடன் பலரும் எதிர்மறையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க...

நட்பு முக்கியமில்ல தமிழ்நாட்டு நலன்தான் முக்கியம் - கமல்ஹாசன்

Intro:Body:

Kasthuri tweet about RajiniKamal @kamalhaasan  

https://twitter.com/KasthuriShankar/status/1197271484739309568

Conclusion:
Last Updated : Nov 22, 2019, 4:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.