'ஹீரோ' படத்தையடுத்து நடிகர் கார்த்தியை வைத்து இயக்குநர் பி.எஸ். மித்ரன் 'சர்தார்' படத்தை இயக்கிவருகிறார். 'சிறுத்தை' படத்திற்குப் பிறகு நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் இதுவாகும்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இதில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து தற்போது கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் 'சர்தார்' படத்தின் படப்பிடிப்பு வரும் 16ஆம் தேதிமுதல் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இதற்காக இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஸ்பை திரில்லர் பாணியில் இப்படம் உருவாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதால், நடிகர் கார்த்தி 'சர்தார்' படத்திற்கு நேரம் ஒதுக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தன் படத்தில் மகளுக்கு வாய்ப்பு கொடுத்த 'மூடர் கூடம்' நவீன்