ETV Bharat / sitara

'கதை சொல்ல தெரியாது... ஆனால் படம் பேசும்' - அதுதான் கார்த்திக் சுப்புராஜ்! - கார்த்திக் சுப்புராஜ்

பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி அழுத்தமான படங்களையும், சூப்பர் ஸ்டாரான ரஜினியை வைத்து பேட்ட எனும் மாஸ் படத்தை கொடுத்தும், தமிழ் சினிமா ரசிகனின் ரசனையை உயர்த்தும் மகா கலைஞன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பிறந்த தினம் இன்று.

கார்த்திக் சுப்புராஜ்
author img

By

Published : Mar 19, 2019, 6:06 PM IST

கை நிறைய சம்பளம், ஐடி வேலை என்று ஜாலியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையை விட்டு, சினிமா ஆசையால் குறும்பட இயக்குநராக மாறினார் கார்த்திக் சுப்புராஜ். வாய்ப்புகளை தேடி அலையாமல், வாய்ப்புகளை அவராகவே உருவாக்கிக் கொண்டார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் குறும்பட இயக்குநராக அறிமுகமாகி காட்சிப்பிழை, ராவணம், துரு, வி, நீர் என பல குறும்படங்களை இயக்கியுள்ளார். இதில், அவருக்கு கிடைத்த நட்பு வட்டாரம் பெரிதென்றே சொல்லலாம். இதையடுத்து தனக்கான முழு பயிற்சியை எடுத்த பிறகு குறும்படங்கள் இயக்குவதை கைவிட்டு முழுநீள திரைப்படத்தை இயக்க தயாரானார்.

எந்தவித தடுமாற்றமும் இல்லாமல், அவரது ஆஸ்தான குறும்பட கதாநாயகன் விஜய் சேதுபதியை வைத்து பீட்சா படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமானார். பீட்சாவில் பேய் என்ற புதுவிதமான படைப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து அவர் இயக்கிய ஜிகர்தண்டா படத்தின் வெற்றியும், அதன் எதிர்பார்ப்பும் கார்த்திக் சுப்புராஜிற்கான அடையாளத்தை தந்தன. இப்படம் சிறந்த நடிகர், சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருதை பெற்று கார்த்திக் சுப்புராஜின் இமேஜும் மாறியது. மணிரத்னம் உட்பட திரை ஜாம்பவான்களே நேரில் அழைத்து வாழ்த்தும் அளவிற்கு நற்பெயரை பெற்றார்.

கதை சொல்ல தெரியாது. ஆனால் தனது படத்தின் கதைகள் பேசும் என்பதை நிருபித்துக் காட்டினார். புத்தகங்களை தேடிப் படிக்கும் பழக்கத்தை கொண்ட கார்த்திக் சுப்புராஜ், தனது சிறு வயதில் இருந்தே அப்பழக்கத்தை வழக்கமாக்கி கொண்டார். தனது கவலைகளை மறக்க புத்தகங்களை தேடுவேன், அதிலும் எழுத்தாளர் வண்ணதாசன் பெண்களை பற்றி எழுதிய கதை என்னை மிகவும் ஈர்த்தது எனக் கூறினார்.

மேலும், தன்னிடம் ஒரு கேங்ஸ்டர் ஸ்கிரிப்ட் ரெடியா இருந்தது. ஆனால் நான் மோசமாதான் கதை சொல்வேன். யாருக்கும் புரியாது. தயாரிப்பாளர்களிடம் படத்தின் ஸ்கிரிப்டை படிச்சுப் பார்க்கச் சொல்வேன். கதையை சொல்ல சொன்னால் தயக்கம்தான். கதை சொல்ல தெரியாது, தனது கதையின் ஆழத்தை புரிந்து கொண்டவனாக இருப்பேன் என்று கூறியுள்ளார். ஒரு கலைஞனின் படைப்பாற்றலை ரசிக்க தெரிந்தால் போதும், அதற்கான உழைப்பை100 சதவிகிதம் இயக்குநர்கள் தருவார்கள் என்றார்.

இதனைத்தொடர்ந்து இறைவி, மெர்க்குரி படத்தை இயக்கினார் விமர்சனங்கள் நல்லவிதமாக அமைந்தன. படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. வெற்றிகளையும் தோல்விகளையும் கண்டு துவண்டு போகாமல் மீண்டும் படங்களை இயக்க தயரானார் கார்த்திக் சுப்புராஜ்.

அந்த நொடியில் ஒரு புயல் வேகமாக வீசியது அதுதான் பேட்ட படத்தின் வாய்ப்பு. தமிழ் சினிமாவின் டான் என்று கூறப்படும் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சி ஆர்ப்பரிக்க முடியாதது. ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் பேட்ட படத்தின் மூலம் கேங்ஸ்டர் அவதாரம் காட்சிக்கு காட்சிக்கு கைதட்டல் வாங்கின. படத்தின் வெற்றியை தாண்டி அமோக வசூலையும் பெற்றது.
இந்த வெறிப்பிடித்த நாயகர்களின் கதாநாயகன் மீண்டும் நல்ல படைப்புகளை தர வேண்டும் மக்களின் சிந்தனையில் வேறூன்ற பிறந்தநாள் வாழ்த்துகள்.

Intro:Body:

Karthik subbaraj birthday special

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.