'ரெமோ' பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் 'சுல்தான்'. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்றது.
தற்போது உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக, படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும், படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
கடந்த சில நாட்களாக 'சுல்தான்' படமும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. தற்போது இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தனது ட்விட்டர் பதிவில், ' 'சுல்தான்' திரைப்படத்தின் 90 விழுக்காடு படப்பிடிப்பு, பெரும்பாலான படத்தொகுப்பு முடிந்துவிட்டது. இந்த கரோனா பிரச்னைக்கு மத்தியில் மீதி இருக்கும் பணிகளை முடிக்கத் திட்டமிட்டு வருகிறோம்.
ட்ரீம் வாரியர் தயாரித்திருக்கும் மிகப் பிரமாண்டமான முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படங்களில் ஒன்றாக இது இருக்கும். உங்கள் அனைவருக்கும் ஏற்கெனவே தெரிந்ததைப்போல இப்போதைக்கு வெளியீட்டுத் திட்டம் எதுவும் இல்லை' என்று பதிவிட்டுள்ளார்.
கார்த்தியின் 'சுல்தான்' இப்போதைக்கு வெளியிடத் திட்டம் இல்லை - தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு - சுல்தான் வெளியாகும் தேதி
சென்னை: கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'சுல்தான்' திரைப்படத்தின் தற்போதைய நிலை குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.