சுந்தர் பாலு இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார், அஷ்னா, சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘கன்னித்தீவு’. இயக்குநரே தயாரிப்பு பணியை மேற்கொண்டுள்ளார்.
அரோல் கொரலி இசையமைக்க, சிட்டி பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிரட்டலாக உள்ளது. கதாநாயகிகள் ஒரு ஏரியில் பயத்துடன் விழித்துக் கொண்டிருக்க, கீழே ஒரு முதலை வாயைத் திறந்தபடி இருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.